‘விஸ்வரூபம்’ படத்தில்
நடித்த பின் ஆன்ட்ரியாவின் ‘மார்க்கெட்,’ தமிழ் பட உலகில் உயர்ந்து
இருப்பது நிஜம். அதைத்தொடர்ந்து பிரபல கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து
விடலாம்... சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விடலாம் என்று கணக்குப்
போட்டார், ஆன்ட்ரியா.
ஆனால், அவர் கணக்கு தவறாகி விட்டது. அவர் எதிர்பார்த்த அளவுக்கு புதிய படங்கள் வரவில்லை. இப்போது அவர், ‘விஸ்வரூபம்–2’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ‘‘முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் நான்தான் முக்கிய கதாநாயகியாக நடித்து இருக்கிறேன். கமலுடன் எனக்கு பாடல் காட்சி கூட இருக்கிறது.
அதில், கவர்ச்சியாகவும் நடித்து இருக்கிறேன்’’ என்கிறார், ஆன்ட்ரியா. ‘விஸ்வரூபம்–2’ படத்துக்குப்பின் தனது சம்பளத்தை உயர்த்துவது என்று அவர் கணக்குப்போட்டு காத்திருக்கிறார். அதற்கு முன்பாக, ‘பிரம்மன்’ என்ற படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு ஆன்ட்ரியா ரூ.25 லட்சம் கேட்டு இருக்கிறார்.
‘‘சம்பளம் ரொம்ப அதிகமாக இருக்கிறதே?’’ என்று தயாரிப்பாளர் பேரம் பேசினார். உடனே ஆன்ட்ரியா, ‘‘அந்த பாடலையும் நானே பாடி விடுகிறேன். பாட்டு, நடனம் இரண்டுக்கும் சேர்த்து ரூ.25 லட்சம் கொடுங்கள்’’ என்றாராம். தயாரிப்பாளருக்கு அவ்வளவு பணம் கொடுக்க விருப்பம் இல்லை.
ஆனால், அந்த பாடல் காட்சியில் ஆன்ட்ரியா ஆடினால்தான் பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர் பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர், ஆன்ட்ரியாவுக்கு ரூ.25 லட்சம் கொடுத்து இருக்கிறார். மகிழ்ச்சியுடன் அந்த சம்பளத்தை பெற்றுக்கொண்ட ஆன்ட்ரியா, இனிமேல் ஒரு பாடலுக்கு தயக்கமே இல்லாமல் ஆடுவது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.

No comments:
Post a Comment