Thursday, 27 February 2014

முஸ்லிமாக மாறுவதை கேட்டு இளையராஜா அதிர்ச்சியானார்– யுவன் ஷங்கர் ராஜா

இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

முஸ்லிம் ஆக மாறுவது என்பது திடீர் என எடுத்த முடிவு அல்ல. ஒன்றரை வருடமாக இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் படித்தேன். நிறைய ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தது. புனித குரானை படித்த பிறகு நிறைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எனக்கு விடை கிடைத்தது.
என் தந்தை இளையராஜாவிடம் முஸ்லிம் மதத்துக்கு மாறப்போகும் முடிவு பற்றி சொன்னேன். இதை கேட்டதும் ஆரம்பத்தில் அவர் அதிர்ச்சியானார். அதன் பிறகு என்னை அவர் புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்.
முஸ்லிமாக மாறியதால் எனக்கும் இளையராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.

முஸ்லிம் பெண்னை மணப்பதற்காக நான் முஸ்லிமாக மாறியதாக சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை.

Friday, 21 February 2014

Karuna Shukla


Atal Bihari Vajpayee's niece Karuna Shukla joins Congress

New Delhi:  Karuna Shukla, the niece of former prime minister Atal Bihari Vajpayee and former BJP leader, today joined the Congress.

She had quit the BJP last year before the Vidhan Sabha elections, alleging that she was being neglected by senior party leaders.

The 63-year-old was a national vice-president of the BJP Mahila Morcha and also an MP from Chhattisgarh.

She had alleged that she was removed from all posts in the party and was not consulted for anything. Ms Shukla said that she was very sad at quitting the BJP but because the manner in which the party "treated" her, she was forced to leave it.

Thursday, 20 February 2014

சொந்த குரலில் பாடி, ஆடுவதற்கு ரூ.25 லட்சம் கேட்கும் ஆண்ட்ரியா

‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்த பின் ஆன்ட்ரியாவின் ‘மார்க்கெட்,’ தமிழ் பட உலகில் உயர்ந்து இருப்பது நிஜம். அதைத்தொடர்ந்து பிரபல கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விடலாம்... சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விடலாம் என்று கணக்குப் போட்டார், ஆன்ட்ரியா.


ஆனால், அவர் கணக்கு தவறாகி விட்டது. அவர் எதிர்பார்த்த அளவுக்கு புதிய படங்கள் வரவில்லை. இப்போது அவர், ‘விஸ்வரூபம்–2’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ‘‘முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் நான்தான் முக்கிய கதாநாயகியாக நடித்து இருக்கிறேன். கமலுடன் எனக்கு பாடல் காட்சி கூட இருக்கிறது.

அதில், கவர்ச்சியாகவும் நடித்து இருக்கிறேன்’’ என்கிறார், ஆன்ட்ரியா. ‘விஸ்வரூபம்–2’ படத்துக்குப்பின் தனது சம்பளத்தை உயர்த்துவது என்று அவர் கணக்குப்போட்டு காத்திருக்கிறார். அதற்கு முன்பாக, ‘பிரம்மன்’ என்ற படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு ஆன்ட்ரியா ரூ.25 லட்சம் கேட்டு இருக்கிறார்.

‘‘சம்பளம் ரொம்ப அதிகமாக இருக்கிறதே?’’ என்று தயாரிப்பாளர் பேரம் பேசினார். உடனே ஆன்ட்ரியா, ‘‘அந்த பாடலையும் நானே பாடி விடுகிறேன். பாட்டு, நடனம் இரண்டுக்கும் சேர்த்து ரூ.25 லட்சம் கொடுங்கள்’’ என்றாராம். தயாரிப்பாளருக்கு அவ்வளவு பணம் கொடுக்க விருப்பம் இல்லை.

ஆனால், அந்த பாடல் காட்சியில் ஆன்ட்ரியா ஆடினால்தான் பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர் பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர், ஆன்ட்ரியாவுக்கு ரூ.25 லட்சம் கொடுத்து இருக்கிறார். மகிழ்ச்சியுடன் அந்த சம்பளத்தை பெற்றுக்கொண்ட ஆன்ட்ரியா, இனிமேல் ஒரு பாடலுக்கு தயக்கமே இல்லாமல் ஆடுவது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.

Thursday, 13 February 2014

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஸ்காட்லாந்து இசைக் கல்லூரியின் கவுரவ டாக்டர் பட்டம்

ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

'ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் மீண்டும் இவர் நிலைநாட்டினார்.

இதற்கு முன்னதாகவும், பிறகும் திரை இசைத்துறைக்கான பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் வாங்கி குவித்துள்ள சென்னையை சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இசைத் துறையில் ரஹ்மானின் சாதனைகளைப் போற்றும் வகையில் அவருக்கு இந்த விருதினை வழங்குவதாக ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து அறிவித்தது.

தனது கே.எம். இசைப் பள்ளி மாணவர்களுடன் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஏ.ஆர். ரஹ்மான், இந்த கவுரவ பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் நன்றியுரை ஆற்றிய ஏ.ஆர்.ரஹ்மான், '1845-லிருந்து சர்வதேச அளவில் இசை, நடனம், நடிப்பு என கலைத்துறை கல்வியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து நிறுவனம் அளித்துள்ள இந்த கவுரவ பட்டம் தனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது' என குறிப்பிட்டார்.

Monday, 10 February 2014

வார தீப பரிகார பூஜை!

ஞாயிறு:-

ஞாயிற்றுக்கிழமை அய்யப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.

திங்கள் :-

திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணெய் கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத்தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடு இது.

செவ்வாய்:-

செவ்வாய்க்கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.

புதன்:-

புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி அகலம்.

வியாழன்:-

வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசிமாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.

வெள்ளி:-

வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய்காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.

சனி:-

சனிக்கிழமைகளில் நல்லஎண்ணை கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீப பித்ரு சாபங்கள் நீங்கும். மேற்கண்ட வாரதீப பூஜையை திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராசுவாமிகள் தெரிவித்துள்ளார்கள்.




Wednesday, 5 February 2014

ஹோமம் தரும் பலன்

ஹோமங்கள் பல உண்டு. ஒவ்வொரு ஹோமமும் எத்தகைய பலன் கிடைக்க செய்யப்படுகிறது என்று பார்ப்போம்.  


1. ஸ்ரீவாஞ்ச கல்ப கணபதி ஹோமம் – நினைக்கும் காரியம் தடையின்றி நடைபெற

2. நவக்கிரக ஹோமம் – கிரக தோஷங்கள் விலகுவதற்கு 

3. ஸ்ரீவித்யா ஹோமம் – நாட்டில் அமைதியும், சுபிட்சமும் உண்டாவதற்கு 

4. அம்ருத ம்ருத்யஞ்செய ஹோமம் – ஆயுள் விருத்திக்கு 

5. ஸ்ரீசூக்தி ஹோமம் – செல்வம் பெருக 

6. சுதர்சன ஹோமம் – எதிரிகள் நீங்க 

7. ஆவாஹந்தி ஹோமம் – ஏவல், பில்லி, சூனியம் விலக 

8. வருண ஹோமம் – மழை பொழிய.

Monday, 3 February 2014

சாளக்ராம காயத்ரி மந்திரம்

‘ஓம் விஷமந் நாசாய வித்மஹே 
விஷ்ணு வாஸாய தீமஹி 
தன்னோ சிலா ப்ரஜோதயாத்’ 

இதை உபதேசம் பெற்றுத் தினமும் 27 முறை ஜபித்து, சாளக்ராம பூஜை செய்து வந்தால் சகல தோஷ நிவாரணம் ஏற்பட்டு வாழ்வில் பெரியோர்கள் மதிக்கும் நல்ல நிலையைப் பெறலாம். மேலும் சாளக்ராமத்தின் மூல மந்திரத்தை இங்கு காணலாம். இதை அனைவருமே உச்சாடனம் செய்து, துளசி, தீர்த்தம், நைவேத்தியம், தூப– தீபம் சமர்ப்பித்து வணங்கி வரலாம்.