ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ‘ராஜா ராணி’ படத்துக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்துள்ளது. ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் என பரபரப்பை கிளப்பி, இருவரும் சர்ச்சில் திருமணக் கோலத்தில் இருப்பதுபோன்ற படங்களை வெளியிட்டனர். அடுத்ததாக படத்தின் சிங்கிள் டிராக், மற்றும் பாடல் எடுக்கப்பட்ட காட்சி என வெளியிட்டு அமர்க்களப்படுத்தினர்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை வரும் 23-ந் தேதி சென்னையில் பிரம்மாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான அழைப்பிழை பழைய எல்.பி. ரிகார்டு வடிவில் அச்சடித்துள்ளனர்.
இந்த அழைப்பிதழை இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இப்படத்தின் இயக்குனர் அட்லி நேரில் கொடுத்து விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவருக்கு ரஜினி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
‘ராஜா ராணி’ படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நஸீம், சத்யராஜ், சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இயக்குனர் அட்லி, நேரில் கொடுத்து விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவருக்கு ரஜினி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
‘ராஜா ராணி’ படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நஸீம், சத்யராஜ், சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இயக்குனர் அட்லி, ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
No comments:
Post a Comment